752 ரன்ஸ் அடிச்சு அற்புதம் செஞ்சுருக்காரு.. ஆனாலும் கருண் நாயரை கழற்றி விட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

Ajit Agarkar
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்தத் அணியில் கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 7 போட்டிகளில் 752 ரன்களை 752 என்று அபாரமான சராசரியில் குவித்துள்ளார். அந்த 7 போட்டிகளில் 6 முறை அவுட்டாகாத அவர் 5 சதங்களை அடித்து அற்புதமாக விளையாடி வருகிறார். அதனால் இந்திய அணியில் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

கருண் நாயர் வாய்ப்பு:

அதே போல கடினமான உழைப்பு இல்லையெனில் இந்த செயல்பாடு வராது என்று கருண் நாயருக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார். அதன் காரணமாக குறைந்தபட்சம் அடுத்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

இந்நிலையில் 752 ரன்கள் அடித்தாலும் 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் கருண் நாயரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் ஸ்பெஷல் செயல்பாடு. ஒருவர் 752 ரன்களை 752 என்ற சராசரியில் அடிப்பது அற்புதமானது”

- Advertisement -

அகர்கர் விளக்கம்:

“அது போன்ற செயல்பாடுகளை பற்றி நாங்களும் பேசினோம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போது இந்திய அணியில் வாய்ப்பைப் பிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவருமே 40க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். துரதிஷ்டவசமாக அனைவரையும் உங்களால் அணியில் தேர்ந்தெடுக்க முடியாது”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியில் சிராஜ் கழற்றி விடப்பட்டது ஏன்? பும்ரா பவுலிங் செய்வாரா? கேப்டன் ரோஹித் பதில்

“இது 15 பேர் கொண்ட அணி மட்டுமே. அதே சமயம் அது போன்ற செயல்பாடுகள் உங்களுடைய கவனத்தை ஈர்க்கும்” என்று கூறினார். அதனால் 2016இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு நழுவி உள்ளது. அடுத்ததாக அவருக்கு ஐபிஎல் முடிந்த பின் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement