அதுக்குன்னு வீட்டுக்கு அனுப்பனுமா? இந்தியா அந்த கோப்பைகளை ஜெய்க்க பும்ரா தேவை.. அகர்கர் விளக்கம்

Ajit Agarkar
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். துரதிஷ்டவசமாக அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. அதனால் அவருடைய பணிச்சுமை குறித்து சுனில் காவாஸ்கர், இர்பான் பதான் போன்ற நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

குறிப்பாக இந்திய அணி யாரையும் நம்பி இருக்கவில்லை என்பதால் ஒன்று ஜஸ்ப்ரித் பும்ரா ஒன்று முழுமையாக விளையாட வேண்டும் அல்லது ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லாத குறையாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிராஜ் உள்ளிட்ட மற்ற இந்திய பவுலர்கள் தடுமாற்றமாக பவுலிங் செய்தனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு பும்ரா தேவை:

அப்போது அவர்களுக்கும் சேர்ந்து முழுமூச்சுடன் பவுலிங் செய்த பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயமடைந்த அவர் முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் இங்கிலாந்தில் முழுமையாக விளையாட முடியாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். அப்படியிருந்தும் அவரை நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை பற்றி எதுவும் திட்டமிடப்படவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அடுத்து வரும் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களை இந்தியா வெல்ல பும்ரா அவசியம் என்பதால் விமர்சிப்பவர்களுக்காக எதையும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். இது பற்றி அகர்கர் பேசியது பின்வருமாறு. “எங்களிடம் பும்ரா குறித்து எந்த எழுதப்பட்ட திட்டமும் இல்லை”

- Advertisement -

அகர்கர் ஆதரவு:

“இங்கிலாந்து தொடருக்கு பின் நல்ல இடைவெளி இருக்கிறது. இப்போது மட்டுமல்ல, காயத்திற்கு முன்பாகவும் நாங்கள் பும்ராவை நன்றாக பார்த்துக்கொள்ள முயற்சித்தோம். ஏனெனில் அவர் எவ்வளவு மதிப்பு மிக்கவர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் அனைத்து பெரிய போட்டிகளிலும் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். சர்வதேச அரங்கம் என்பது பெரியது என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: அகர்கர், கம்பீர் முடிவால்.. பாவம் சஞ்சு சாம்சன் கேரியர் முடியப் போறத நினச்சா சோகமா இருக்க.. அஸ்வின் கவலை

“ஆனால் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பெரிய தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்காக நீங்கள் பும்ரா விளையாடுவதை விரும்புவீர்கள். பும்ரா தனித்துவமான ஸ்பெஷலானர் என்பது மாறாது. கடந்த 2 – 3 வருடங்களில் ஏற்கனவே சில காயத்தை சந்தித்துள்ள அவர் மீது எக்ஸ்ட்ரா அக்கறை காட்டப்படும். முக்கியமான தொடருக்கு அவர் தேவை என்று நாங்கள் கருதுகிறோம். அதை உடற்பயிற்சியாளர்களுடன் சேர்ந்து கவனித்து வருகிறோம். எனவே அவர் நிறையப் போட்டிகளில் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறினார்.

Advertisement