- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுந்தர், சுதர்சன் உட்பட யாராக இருந்தாலும்.. கம்பீர் இதை செய்யலன்னா இந்தியா ஜெய்க்காது.. ரஹானே அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 15 வருடங்கள் கழித்து தெனாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு ஆடுகளம் முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் 3வது இடத்தில் விளையாடி வந்த சாய் சுதர்சனை திடீரென கழற்றி விட்ட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததும் தோல்விக்கு காரணமானதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாய் சுதர்சன் 87, 39 ரன்கள் அடித்து அசத்தினார். எனவே தொடர்ந்து அவர் 3வது இடத்தில் விளையாடத் தகுதியானவர் என்று முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரகானே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

யாராக இருந்தாலும்:

அதே போல முதல் முறையாக 3வது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா பிட்ச்சில் 150+ பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். எனவே அவரும் 3வது இடத்தில் விளையாடும் திறமையைப் பெற்றுள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். ஆனால் சுந்தர், சுதர்சன் உட்பட யாரை விளையாட வைத்தாலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புக் கொடுக்காவிட்டால் இந்திய அணியால் வெல்ல முடியாது என்று ரகானே விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாய் சுதர்சன் 87, 39 ரன்கள் அடித்து நன்றாக விளையாடினார் என்று நான் நினைக்கிறேன். 6, 7வது இடங்களைக் காட்டிலும் 3வது இடத்தில் விளையாட உங்களுக்கு வித்தியாசமான திறன் தேவைப்படும். வாஷிங்டன் சுந்தர் சிறந்த திறமையுடைய வீரர். ஆனால் 3வது இடத்தில் விளையாடுவது அவருக்கு குழப்பத்தைக் கொடுக்கும்”

- Advertisement -

நிலையான வாய்ப்பு கொடுங்க:

“அவர் 3வது இடத்தில் எப்படி என்னுடைய ஆட்டத்தை செட்டிலாக்க முடியும்? என்று சிந்திப்பார். எனவே சுந்தர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்று நான் நம்புகிறேன். 3வது இடத்தில் விளையாடுவதற்காக அவர் நீண்ட நேரம் வித்யாசமாக தயாராக வேண்டிய சூழல் ஏற்படும். அதே போல லோயர் ஆடரில் விளையாடுவதற்கும் மாறுபட்ட திறமை வேண்டும். இந்த 2 இடங்களிலும் சூழ்நிலைகள் வேறு மாதிரியாக இருக்கும்”

இதையும் படிங்க: 172க்கு அவுட்.. தெறிக்க விட்ட ஸ்டார்க் 35 வருட சாதனை.. 1887க்குப்பின் 197 பந்தில் பஸ்பால் இங்கிலாந்தை முடித்த ஆஸி

“சுந்தர் அல்லது சுதர்சன் ஆகிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பது முக்கியம். ஒருவேளை இந்திய அணி 3வது இடத்தில் விளையாட வைக்க விரும்பினால் அவருக்கு நீண்ட வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதையே சுந்தருக்கும் செய்ய வேண்டும். நாட்டுக்காக 3வது இடத்தில் விளையாடும் ஒருவருக்கு நீண்ட வாய்ப்பையும் ஆதரவையும் கொடுப்பது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -