டிராவிட் போன் மூலம் கூறிய இந்த வார்த்தைகள் தான் ஆஸ்திரேலிய தொடரில் என் சக்ஸஸ்க்கு காரணம் – ரஹானே ஓபன்டாக்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

- Advertisement -

இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். இதில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார். இதனால் மீதமிருந்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரகானே இந்திய அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தொடரில் ரகானே தலைமையில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிகளையும் ஒரு போட்டியில் டிரா செய்திருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரகானே டிராவிட்டின் போன் கால் குறித்து கூறி இருக்கிறார். ரகானே கூறுகையில் “ ஐபிஎல் தொடரை முடித்து விட்டு நாங்கள் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு ரெடியாக இருந்தபோது ராகுல் டிராவிட் எனக்கு போன் செய்தார்.

Rahane

முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நீங்கள் தான் இந்திய அணியை வழிநடத்த உள்ளீர்கள். இதனால் நீங்கள் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நீங்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். அணியையும் வீரர்களையும் எப்படி வழி நடத்துவது என்பதை மட்டும் நீங்கள் திட்டமிடுங்கள்.

Rahane-4

குறிப்பாக போட்டியின் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம்.நீங்கள் நினைப்பதை சரியாக செய்து முடியுங்கள்” என்று ராகுல் டிராவிட் கூறியதாக ரகானே கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவுரைகள் இந்திய அணியை வழிநடத்த தனக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக ரஹானே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement