இந்தியாவில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை தொட்டுள்ளது. அதில் டிசம்பர் 11ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள அலூர் நகரில் நான்காவது காலிறுதிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக் சுற்றில் அசத்திய மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை அடுத்து களம் இறங்கிய விதர்பா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 221-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதர்வா டைட் 66 (41), அபூர்வ் வான்கடே 51 (33), சுபம் துபே 43* (19) ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக சூர்யன்ஷ் செட்ஜ் 2, அதர்வா அன்கோலேகர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
ரஹானே அதிரடி:
பின்னர் 222 ரன்களை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரகானே மற்றும் சுமாரான ஃபார்மில் இருக்கும் பிரிதிவி ஷா ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். 7 ஓவரில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் பிரித்வி 5 பவுண்டரி 4 சிக்சருடன் 49 (26) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5, நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரகானே அரை சதமடித்து தம்முடைய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அந்த வகையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 84 (45) ரன்களை 186.67 ஸ்ட்ரைக் ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சிவம் துபே தம்முடைய பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 37* (22) ரன்களும் சூர்யன்ஷ் செட்ஜ் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 36* (12) ரன்களும் விளாசி ஃபினிஷிங் செய்தார்கள்.
கொல்கத்தா வாய்ப்பு:
அதனால் 19.2 ஓவரிலேயே 224-4 ரன்கள் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் திபேஸ் ஃபர்வாணி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் விதர்பா வெளியேறியது. இந்த வெற்றிக்கு 84 ரன்கள் அடித்த முக்கிய பங்காற்றிய ரஹானே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க: முதல் போட்டியில் ஜெய்த்த பும்ரா பிட்ச் மேப்பை பாத்து கத்துக்கோங்க.. ரோஹித்துக்கு சைமன் கேட்ச் அறிவுரை
மேலும் இத்தொடரில் கடைசி 5 இன்னிங்ஸில் அவர் 52, 68, 22, 95, 84 ரன்கள் குவித்துள்ளார். அதனால் 2025 ஐபிஎல் தொடரில் அவரை கொல்கத்தா நிர்வாகம் கேப்டனாக நியமிப்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரோஹித் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். அதனால் கடந்த முறை அங்கே கேப்டனாக வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஹானே இம்முறை ஆஸ்திரேலியாவில் விளையாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.



