ஆண்டர்சன் மாதிரி சிராஜிடம் இந்த திறமை இருப்பதாலேயே.. பும்ரா இடத்தை நிரப்ப முடியுது.. ரஹானே பாராட்டு

Ajinkya Rahane 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் பகிர்ந்து கொண்டது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் அபாரமாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அன்றைய நாளில் நெருப்பாக செயல்பட்ட சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மிராக்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். முன்னதாக அத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா உட்பட இரு அணிகளைச் சேர்ந்த எந்த வேகப்பந்து வீச்சாளராலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் முகமது சிராஜ் மட்டும் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடினார்.

- Advertisement -

ஆண்டர்சன் போல சிராஜ்:

அந்த 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் எடுத்த அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனையும் படைத்தார். மொத்தமாக 183.5 ஓவர்கள் 1113 பந்துகளை வீசிய சிராஜ் கடைசி பந்தை கூட 140+ கிலோமீட்டர் வேகத்தில் வீசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் மைதானத்தில் பெரும்பாலான பவுலர்கள் வார்ம் அப் செய்ய 8 – 10 பந்துகளை எடுத்துக் கொள்வார்கள் என்று அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல முகமது சிராஜ் ஓரிரு பந்துகளிலேயே வார்ம் அஃப் செய்து முழுமையாக பவுலிங் செய்யத் துவங்குவார் என்று ரஹானே தெரிவித்துள்ளார். 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் தமது தலைமையில் அறிமுகமான சிராஜ் தற்போது முன்னேறியுள்ளது குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் மற்ற பவுலர்கள் வார்ம் அஃப் செய்ய 8 – 10 பந்துகளை எடுத்துக் கொள்வார்கள்”

- Advertisement -

ரஹானே பாராட்டு:

“சில பவுலர்கள் அதற்காக சில பந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். சிராஜ் அது போன்றவர். ஜேம்ஸ் ஆண்டர்சன் போல அவர் முதல் பந்திலிருந்தே தயாராக இருப்பார். ஸ்பெல்லின் 8 அல்லது 9வது ஓவரில் கூட அவரிடம் அதே ஆக்ரோஷம் மற்றும் தீவிரத்தன்மை இருக்கும்”

இதையும் படிங்க: இந்த கோபத்தை பாத்து தான்.. 2021இல் சிராஜை இந்தியாவுக்காக விளையாட வெச்சேன்.. கேப்டன் ரஹானே பேட்டி

“தற்போது அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனிக்கிறேன். அதாவது தற்போது சிராஜ் தாம் சொந்தமாக வைக்கும் ஃபீல்டிங் மேலே தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளார். ஒரு கேப்டனிடம் “எனக்கு இந்த ஃபீல்டை கொடுங்கள்” என்று பவுலர் சொல்லும் போது விஷயங்கள் எளிதாகும். இந்த இங்கிலாந்து தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாததால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை அவருக்கு உதவியது” என்று கூறினார்.

Advertisement