- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 ஃபைனலில் நல்லா விளையாடியும் கழற்றி விட்டாங்க.. இந்தியாவுக்காக இதயத்துடன் வருவேன்.. ரஹானே

மும்பை கிரிக்கெட் அணி 2024 – 25 ரஞ்சிக் கோப்பையில் அஜிங்க்ய ரஹானே தலைமையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடம் அவருடைய தலைமையில் 42வது ரஞ்சிக்கோப்பையை வென்ற மும்பை இம்முறையும் அசத்தி வருகிறது. 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் மும்பை கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதே வேகத்தில் ரஞ்சிக்கோப்பையிலும் அசத்தும் அவர் ஹரியானாவுக்கு எதிரான காலிறுதியில் சதத்தை அடித்து மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாக போராடி வருகிறார். இந்நிலையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 89, 46 அடித்து நன்றாக விளையாடியும் இந்திய அணி தம்மை கழற்றி விட்டதாக ரகானே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

போராடும் ரஹானே:

அந்தத் போட்டிக்கு முன்பாக கழற்றி விடப்பட்டிருந்த ரகானே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அசத்தியதால் ஃபைனலுக்கு தேர்வானார். அந்த வாய்ப்பில் 135 ரன்கள் அடித்து அசத்திய அவர் அடுத்ததாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் கழற்றி விடப்பட்ட ரகானே இப்போதும் இந்தியாவுக்காக விளையாட காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நான் நன்றாகவே பேட்டிங் செய்தேன். இருப்பினும் அதன் பின் நீக்கப்பட்டேன். ஆனால் அது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வாளர்களின் கைகளில் இருக்கிறது. அந்தப் போட்டியில் நான் நன்றாகவே பேட்டிங் செய்தேன் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

வாய்ப்பு கிடைக்குமா:

“உள்ளூர் போட்டிகள் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அதனாலேயே எனக்கு இன்னும் ஆர்வம் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கும் எனக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் இன்னும் எனக்குள் திறமை இருக்கிறது. நான் இதயத்திலிருந்து விளையாடுவதை உங்களால் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: இந்திய தொடர் பெருசு தான்.. ஆனா இந்தியாவை விட பெரிய பரிசைத் தட்டி தூக்குவோம்.. பென் டக்கெட் விளக்கம்

“இங்கிலாந்து தொடர் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. தற்போது நாங்கள் வீட்டிற்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் கவனம் செலுத்த உள்ளோம்” என்று கூறினார். முன்னதாக 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் 36க்கு ஆல் அவுட்டான பின் இந்தியாவை அபாரமாக வழி நடத்திய ரகானே 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -