இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 85 போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 26 அரைசதம் என 5077 ரன்கள் குவித்துள்ளார். கடந்த காலங்களில் விராட் கோலிக்கு அடுத்து மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட அவர் தற்போது பார்மின்றி தொடர்ச்சியாக தடுமாறி வருகிறார்.
நிராகரிக்கப்படும் அஜின்க்யா ரஹானே :
கடந்த 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் 36 வயதான அஜித்த ரஹேனே இனி மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் துலீப் டிராபி தொடரில் இணைந்து விளையாட இருக்கின்றனர். இவ்வேளையில் அனுபவ வீரரான ரஹானேவிற்கு ஏதாவது ஒரு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அவருக்கு எந்த ஒரு அணியிலும் வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து சென்றுள்ள ரஹானே அங்கு கவுண்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
அப்படி நடைபெற்று முடிந்த ஒரு ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாவார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் பி.சி.சி.ஐ அவரது தேர்வில் தெளிவாக இருக்கிறது.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியா காரங்க அதிகமா பேசுறாங்க.. அதுக்கு நீங்க தான் பதிலடி குடுக்கனும் அஷ்வின் – கவாஸ்கர் பேட்டி
அதாவது இனி ரஹானேவை தொடர வைப்பது விட அவரது இடத்தில் இளம் வீரர்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக நிச்சயம் ரஹானேவிற்கு வாய்ப்பினை மறுக்கும் யோசனையுடனே இருக்கிறது. எதிர்வரும் வங்கதேச தொடருக்கு முன்னதாக துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் இந்த தொடரின் முடிவின் அடிப்படையில் இந்திய வீரர்களின் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



