பண்ட் செய்த தவறினால் மோசமான சாதனையில் இடம்பிடித்த ரஹானே – விவரம் இதோ

Rahane-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ரகானேவை தவிர யாரும் சரியாக ஆடவில்லை. இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரகானே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் இறங்கினர் . நேற்றைய ஆட்ட நேர முடிவில் 110 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

rahane

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார் . இந்த ரன்அவுட் ஆட்டத்தையே மாற்றியது. அதன்பின்னர் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதே போட்டியில் 50 ஓவரில் ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் ரிஷப் பண்ட்டின் தவறால் நிகழ்ந்தது . இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் ரஹானே ரன் அவுட் ஆனது இல்லை . மற்றும் ரன் அவுட் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதில்லை. முதன்முறையாக ரன் அவுட் ஆன சம்பவத்தில் சம்பந்தப்பட்டதற்கு காரணம் ரிஷப் பண்ட் தான்.

pant

அந்த பந்தை அடித்தவுடன் தயக்கம் காட்டாமல் ஓடிவந்திருந்தால் ரன் அவுட் ஏற்பட்டிருக்காது. இந்நிலையில் இரண்டாம் நேர ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement