நான் நல்லா விளையாடிய போதே அணியில் இருந்து தூக்கி வீசிட்டாங்க. நிச்சயம் வருவேன் – சவால் விட்ட இந்திய வீரர்

Ind
- Advertisement -

இந்திய அணிக்காக 2011ம் ஆண்டிலிருந்தே விளையாடி வருபவர் அஜின்கியா ரகானே. இந்திய அணிக்கு அறிமுகமானத்திலிருந்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். தற்போது இவருக்கு 32 வயதாகிறது 90 ஒருநாள் போட்டியில் விளையாடி 2962 ரன்கள் குவித்திருக்கிறார். மூன்று சதங்களும் 24 அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் இவர் பிரத்தியேகமாக டெஸ்ட் அணி வீரர் என்று மாற்றப்பட்டார் தற்போது மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க உழைத்து வருவதாக கூறியுள்ளார் அஜின்கியா ரஹானே.

அவர் கூறுகையில்… ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் முன் என்னுடைய புள்ளிவிவரங்கள் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றாக தான் ஆடியிருக்கிறேன். என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி ஆகியவை குறித்துப் பேசுகிறார்கள்.

Rahane

எனது கடைசி சில தொடர்களில் எடுத்துப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது. இவர்கள் சொல்வதை எல்லாம் நான் காதில் போட்டுக் கொள்ள மாட்டேன். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பிடிப்பதற்காக தயாராகி வருகிறேன். கண்டிப்பாக நான் விளையாடுவேன். ஆனால் எந்த இடத்தில் விளையாடுவேன் என்பது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்.

Rahane 1

ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்தாலும் சரி மூன்றாமிடத்தில் பேட்டிங் செய்தாலும் சரி கண்டிப்பாக விளையாடத்தான் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் அஜின்கியா ரஹானே.இந்திய அணியில் நன்றாக விளையாடியும் ஓரங்கட்டப்பட்டவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement