தோனியின் மீதமுள்ள கிரிக்கெட் வாழ்க்கையை இந்த தொடரே தீர்மானிக்கும் – அஜய் ராத்ரா ஓபன் டாக்

Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. துவக்கத்தில் சில மாதங்கள் அவரே ஓய்வு கேட்டாலும் அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் தோனியை இந்திய நிர்வாகம் கழற்றி விட்டது என்றே கூறலாம். மேலும் சமீபத்தில் வெளியான பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இதன் காரணமாக தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தோனியும் இதுவரை தனது ஓய்வு முடிவை குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடி உலக கோப்பை டி20 தொடரில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அந்த கனவும் தற்போது தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் தோனி நிச்சயம் இனி இந்திய அணிக்கு திரும்புவது மிகக் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான அஜய் ராத்ரா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Ratra

அதில் அவர் கூறும்போது : தோனி எப்போதுமே ஒரு கணிக்க முடியாத வீரர்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனென்றால் நீண்ட காலம் இந்திய அணிக்காக அவர் பங்கேற்ற அனுபவம் உடையவர். ஆனால் ஐபிஎல் போட்டிகள் தான் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதமாக அமைந்துவிட்டது.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளில் தோனியின் திறனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க இந்திய தேர்வுக்குழு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் திரும்புவது கடினம் என்றும் தோன்றுவதாக அஜய் ராத்ரா கூறினார்.

dhoni 2

மேலும் தோனி எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோனி என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். மேலும் அவரை எந்தவகையிலும் ஓய்வுக்கு நிர்வாகம் அவசரப்படுத்த கூடாது என்றும் அவருக்கான வழியனுப்பும் போட்டியினை நிர்வாகம் செய்துகொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement