
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அஜித் அகர்கர் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணியை தேர்ந்தெடுக்க 5 மண்டல உறுப்பினர்கள் இருந்தனர். அதில் ஏற்கனவே இருந்த தேர்வுக் குழு உறுப்பினரிலிருந்து சலீல் அன்கோலா புதிதாக ஏற்படுத்தப்பட்ட குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும் தற்போது அவரது பதவி காலம் முடிந்துள்ளது.
எனவே அவருக்கு பதிலாக இந்திய தேர்வுக் குழுவில் அஜய் ரத்ரா சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹரியானாவைத் தேர்ந்த அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஜய் ரத்ரா மொத்தம் 253 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் 99 முதல் தரம் மற்றும் 89 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள 4029, 1381 ரன்கள் குவித்த பிடித்த அனுபவத்தைக் கொண்டவர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் அசாம், பஞ்சாப் போன்ற அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் அஜய் ரத்ரா செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதனால் அவரை புதிய உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு. “பிசிசிஐ ஆலோசனை கமிட்டி செவ்வாய்க் கிழமையன்று மிஸ்டர். அஜித் அகர்கர் தலைமையிலான ஆடவர் தேர்வுக் குழுவில் சலீல் அன்கோலாவுக்கு பதிலாக மிஸ்டர். அஜய் ரத்ராவை தேர்ந்தெடுத்துள்ளது. ஒரு தேர்வாளராக உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அடுத்த தலைமுறை வீரர்களை வீரர்களை கண்டறிந்து ஆதரிப்பதற்காக தற்போதைய தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் திரு ரத்ரா பணியாற்றுவார்”
“அசாம், பஞ்சாப், உத்திரபிரதேசத்தின் தலைமைப் பயிற்சியாளராக ரத்ரா பணியாற்றிய விரிவான பயிற்சி அனுபவம் பெற்றவர். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்” என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: தோல்விக்கு பின் தூளான பாகிஸ்தானின் கனவு? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் புள்ளிப்பட்டியல்.. இந்தியாவின் வாய்ப்பு
அதே போல இந்த கௌரவமான சவாலான வேலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்காற்ற காத்திருப்பதாக அஜய் ரத்ரா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரின் இந்திய அணியை அஜய் ரத்ராவும் தேர்ந்தெடுக்க உள்ளார். அவருடன் எஸ்.எஸ். தாஸ், சுப்ராதோ பேனர்ஜி, சித்தார்த் சரத் ஆகியோரும் உறுப்பினர்களாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.