ஹார்டிக் பாண்டியாவின் அதிரடி இந்த தொடரில் மிஸ் ஆக இதுவே காரணம் – அஜய் ஜடேஜா கருத்து

ajay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் துவக்கத்தில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் விராட் கோலி மட்டும் இறுதி வரை நிலைத்து நின்று 77 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு டீசன்டான ஸ்கோரை எடுக்க உதவினார்.

Wood

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஆல்-ரவுண்டராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 15 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய தொடரின் போது மேட்ச் வின்னிங் இன்னிங்சை ஆடிய பாண்டியா பினிஷராக செயல்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த தொடரில் தொடர்ச்சியாக அவர் அதிரடி காட்ட தவறி வருகிறார். இதுகுறித்து இந்நிலையில் இவரது பேட்டிங்கில் ஏற்பட்ட ஃபெயிலியர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஹார்டிக் பாண்டியாவிடம் எந்த குறையும் இல்லை அவருக்கான இடத்தில்தான் அந்த குறை உள்ளது. ஏனெனில் ஆடிய ஆஸ்திரேலிய தொடரின் போது ஆறாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். அதனால் அவரால் அதிக பந்துகளை எதிர்கொள்ள முடிந்தது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் இரண்டாம்தர பந்துவீச்சாளர்கள் என கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவர் முதல்தர பந்துவீச்சாளர்களை இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடினார்.

pandya 1

ஆனால் இந்த இங்கிலாந்து தொடரில் அப்படி அல்ல. அவர் ஏழாவது வீரராகவே தற்போது களமிறக்கப்பட்டு வருகிறார். கடைசியில் சில பந்துகளே இருக்கும் வேளையில் முதல்தர பந்துவீச்சாளர்களை அதாவது ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. ஒருவேளை அவர் ஆறாவது முன்னதாக களமிறங்கினால் ரஷீத், ஸ்டோக்ஸ், சாம் கரண் ஆகியோரை எதிர்கொண்டு அவர்கள் ஓவரில் அதிரடியாக விளையாடி பின்னர் இறுதியில் ஆர்ச்சர் மற்றும் மார்க்வுட் ஆகியோரது பந்து வீச்சையும் அவர் அதிரடியாக எதிர் கொண்டிருப்பார்.

Pandya-4

எனவே ஹார்டிக் பாண்டியா 6 ஆவது இடத்திலேயே களமிறக்க வேண்டும் என்று ஜடேஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த போட்டியில் பாண்டியா 15 பந்துகளில் 17 ரன்கள் அடிக்காமல் 30 முதல் 35 ரன்கள் அடித்து இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் எனவும் என்றும் சிலர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement