நண்பர் எல்லாம் அப்றம் தான், முதலில் இப்படி செய்வதை நிறுத்துங்க – ராகுல் டிராவிட்டை விளாசும் அஜய் ஜடேஜா

Ajay Jadeja Rahul dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகள் துவங்கியுள்ளது. இருப்பினும் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dravid

ஆனால் ஏற்கனவே கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ரோகித் சர்மா ஓய்வெடுப்பதால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை இந்திய அணிக்கு ஏற்பட்டது. அந்த நிலைமையில் 2023 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் போன்ற எதிரணிகளின் கேப்டன்கள் தங்களது அணிகளுடன் இணைந்து விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் முதல் தொடராக கருதப்படும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பனிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்து அடுத்ததாக கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் தொடருக்காக மும்பையில் தயாராகி வருகிறார். ஆனால் கேப்டன் தொடர்ந்து விளையாடினால் தான் செட்டிலாகி இதர வீரர்களின் குண நலன்களையும் திறமைகளையும் அறிந்து கொண்டு உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும்.

dravid

நண்பர்லாம் அப்றம்:

அதனால் ஐபிஎல் தொடரில் பணிச்சுமை வராதா? நாட்டுக்காகத் தான் பணிச்சுமை ஏற்படுமா என்று கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து வரும் நிலையில் ரோகித் சர்மாவுடன் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட்டும் அவருக்கு போட்டியாக ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் களமிறங்கி விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவது நியாயம் என்ற நிலைமையில் பயிற்சியாளருக்கு எதற்காக ஓய்வு என ரசிகர்களும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பயிற்சியாளருக்கு ஓய்வுகள் தேவைப்படாது என்று விமர்சித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது கிடைக்கும் 2 மாதங்கள் ஓய்வு போதுமானது என தெரிவிக்கும் அவர் நண்பராக ராகுல் டிராவிட் செய்வது தமக்கு பிடிக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர்களுக்கு ஓய்வு தேவையில்லை. அது போக ஐபிஎல் நடைபெறும் போது உங்களுக்கு 2 முதல் இரண்டரை மாதங்கள் தாமாகவே ஓய்வு கிடைக்கிறது. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் நானும் நீண்ட காலமாக பயணித்துள்ளோம். ராகுல் டிராவிட் இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்”

Ajay

“அந்த வகையில் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். ஆனால் பயிற்சியாளராக பொறுப்பேற்ற நீங்கள் சில வருடங்களுக்கு உங்களுடைய அனைத்து அனுபவங்களையும் வீரர்களுக்கு பயிற்சியாக கொடுக்க வேண்டும். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. மற்ற எதுவாக இருந்தாலும் இந்திய அணிக்கு அடுத்ததாகவே இருக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது குறுக்கட்ட செய்தியாளர் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் 2 தொடர் நடைபெறும் போது 2 இடங்களிலும் பயிற்சியாளர்கள் இருப்பதற்கு அவர்கள் ஒன்றும் சூப்பர்மேன் கிடையாதே? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அஜய் ஜடேஜா பதிலளித்தது பின்வருமாறு. “நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் விளையாடும் சில வீரர்கள் 4 நாட்கள் இடைவெளியில் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரிலும் விளையாடப் போகிறார்கள் அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்” என்று தக்க பதிலடி கொடுத்தார். அவர் கூறுவது போல தற்போதைய நியூசிலாந்து தொடரில் விளையாடும் சூரியகுமார் போன்ற வீரர்கள் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச ஒருநாள் தொடரிலும் இடம் பிடித்துள்ளனர். அப்படி களமிறங்கி விளையாடும் முக்கிய வீரர்களே தொடர்ந்து விளையாடும் போது ராகுல் டிராவிட்டாகவே இருந்தாலும் பயிற்சியாளராக இருக்கும் போது ஓய்வு அவசியமில்லை என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

Advertisement