இரவோடு இரவாக தோனிக்கு புதிய பதவி வழங்க என்ன காரணம் – கேள்வியெழுப்பிய முன்னாள் வீரர்

Ajay
- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடுவிதித்து இருந்ததால் அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை வெளியிட்டிருந்தன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியும் பி.சி.சி.ஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதில் தமிழக வீரர் அஷ்வினின் கம்பேக் மற்றும் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது தான் அதிக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்ற தோனி இந்திய அணியில் நிச்சயம் ஏதாவது ஒரு பணியை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது அணியின் ஆலோசகராக தோனி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தோனியை ஏன் வழிகாட்டியாக நியமித்தார்கள் ? அதுவும் ரவிசாஸ்திரி அணியில் இருக்கும் போது இது தேவைதானா ? என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

dhoni

தோனியின் இந்த புதிய பதவி எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் தோனியோட ரசிகன் தான். இருப்பினும் தோனி தனது ஓய்வுக்கு முன்னரே ஒரு புதிய கேப்டனை உருவாக்கிக் கொடுத்தவர். இந்திய அணியை உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றிக்காட்டிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணியில் இருக்கையில் இப்படி ஒரு ஆலோசகர் அணியை வழிநடத்த தேவையா ? என்பது போன்ற கேள்வி எழுகிறது.

ஒரே இரவில் அவரை ஆலோசகராக நியமிக்க என்ன காரணம் ? என்பது புரியாத புதிராக உள்ளது என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement