கில்லை விட ஜடேஜா தான் அதை தொடர்ச்சியா செஞ்சாரு.. லார்ட்ஸில் விட்டதை பிடிச்சுட்டாரு.. அஜய் ஜடேஜா பாராட்டு

Ajay Jadeja
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் அனலாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றியைப் பெற்றது.

அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல 754 ரன்கள் குவித்த சுப்மன் கில் தொடர்நாயகன் விருதை வென்றே அசத்தினார். மேலும் ராகுல் முதல் சுந்தர் வரை அனைவருமே இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றி இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைப் பரிசாக கொடுத்தார்கள்.

- Advertisement -

அசத்திய ஜடேஜா:

இந்நிலையில் இத்தொடரில் பேட்டிங் துறையில் உண்மையில் சுப்மன் கில் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்களை விட ரவீந்திர ஜடேஜா தொடர்ச்சியாக ரன்களை அடித்ததாக முன்னாள் அஜய் ஜடேஜா கூறியுள்ளார். மேலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா – சிராஜ் ஆகியோர் போராடி வெற்றியை நழுவ விட்டார்கள். அந்த வெற்றியை கடைசி போட்டியில் ஜடேஜா, சிராஜ் இந்தியாவுக்கு பிடித்துக் கொடுத்ததாகவும் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.

இது பற்றி அஜய் ஜடேஜா பேசியது பின்வருமாறு. “அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமா? அவர் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பித்துள்ளார். அவர் 754 ரன்களை அடித்த சுப்மன் கில்லை நெருங்கியுள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஜடேஜா கிட்டத்தட்ட 550 ரன்கள் (516) அடித்துள்ளார். கில்லை விட ஜடேஜா தொடர்ச்சியாக சீராக ரன்களை குவித்தார்”

- Advertisement -

அஜய் ஜடேஜா பாராட்டு:

“சொல்லப்போனால் 4 இன்னிங்சில் ஜடேஜா விக்கெட்டை இழக்கவில்லை. எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் அவுட்டானதால் ஆட்டம் முடிந்தது. இந்த மொத்த தொடரிலும் ஜடேஜா 2 இன்னிங்ஸில் மட்டுமே சொற்ப ரன்னில் அவுட்டானார். லார்ட்ஸ் போட்டியில் உங்களால் வெற்றி காண முடியவில்லை. ஆனால் அங்கே சிராஜ் மற்றும் ஜடேஜா போராடினார்கள். ஓவல் வெற்றிக்கான மாற்றமும் வலிமையும் அங்கே தான் துவங்கியது”

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கான ஸ்பெஷல் விருதை வென்ற சுந்தர்.. பாராட்டிய கம்பீர், பாசமாக அழைத்த ஜடேஜா

“அடுத்தப் போட்டியில் நின்ற ஜடேஜா டிரா செய்தார். கடைசிப் போட்டியிலும் ஜடேஜா ரன்கள் அடித்தார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 1, 2, 4வது போட்டிகளில் மட்டுமே கில் பெரிய ரன்கள் குவித்தார். ஆனால் ஜடேஜா அனைத்து 5 போட்டிகளிலுமே குறைந்தது ஒரு அரை சதத்தை அடித்தார். அத்துடன் ஒரு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழாக களமிறங்கி ஆறு முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜடேஜா படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement