
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டம் இழந்தது.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போதைய நிலையில் சமன் செய்து அசத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் இந்த ஆட்டம் இந்த அணியில் உள்ள குறைபாடுகளையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக குவின்டன் டீ காக் ஆடிய ஸ்பெஷல் ஆட்டம் தான் இன்றைய போட்டியில் எங்களது வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.
அவர் கொடுத்த அதிரடியான துவக்கமும் பின்னர் இறுதி வேளையில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய அதிரடியான ஆட்டமும் நல்ல ரன்களை வழங்கியது. அதேபோன்று முதல் போட்டியில் எவ்வாறு சிறப்பாக பந்து வீசினோமோ அதேபோன்று இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : அது இந்தியாவுக்கு எதிராக திரும்பியதே.. தெ.ஆ வெற்றியின் வித்தியாசம்.. ஆட்டநாயகன் டீ காக் பேட்டி
எங்களது அணியின் பந்துவீச்சை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. மேலும் பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். முதல் இரண்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக சென்றுள்ளன. நிச்சயம் இந்த தொடரினை வெற்றிகரமாக முடிக்கும் நம்பிக்கை உள்ளதாகவும் எய்டன் மார்க்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.