- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவுக்காக விராட் கோலி 5 ரன்ஸ் எடுத்தாரு தான்.. ஆனா நீங்கள் செஞ்சது என்ன? பாபருக்கு சேஷாத் கேள்வி

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. சமீப காலமாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் அந்த அணி 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அத்துடன் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சமீப காலங்களில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் மற்றொரு கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் அயர்லாந்து மற்றும் கனடாவுக்கு எதிராக வெற்றி பெற்றும் பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே வெளியேறியது.

- Advertisement -

சேஷாத் கேள்வி:
இந்த தோல்விக்கு பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பேட்டிங்க்கு சவாலான நியூயார்க் பிட்ச்சில் இந்தியாவுக்காக விராட் கோலியை 5 ரன்கள் மட்டுமே அடித்த போது பாபர் அசாமை குறை கூறுவதில் அர்த்தமில்லை என பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் இந்தியா அணியாக இணைந்து விளையாடி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத் தெரிவித்துள்ளார்.

அதே போல பாபர் அசாம் சுமாராக செயல்பட்டாலும் அணியாக சேர்ந்து பாகிஸ்தான் சாதித்தது என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த உலகக் கோப்பையை பார்க்கும் போது நீங்கள் ஜிம்பாப்வே, தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்திடம் தோற்று ஃபைனல் சென்றீர்கள்”

- Advertisement -

“இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் நாம் தோற்றோம். அதே போல கடந்த 3 மாதங்களை திரும்பிப் பார்க்கும் போது நீங்கள் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து வரிசையில் தற்போது அமெரிக்காவிடம் தோற்றுள்ளீர்கள். இந்தியாவிடம் உங்களால் 120 ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை. எனவே இந்த உலகக்கோப்பை மட்டுமின்றி சமீப காலங்களாகவே சுமாராக செயல்படுகிறீர்கள். ஆனால் இதற்காக நீங்கள் சம்பளம் வாங்குகிறீர்கள்”

இதையும் படிங்க: தனியாளா எவ்ளோ தான் பாகிஸ்தான் அணியை தாங்குறது.. தோல்விக்கான காரணத்தை உடைத்த பாபர் அசாம்

“நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தயாராகி விளையாட வேண்டும். அதனாலேயே நீங்கள் சர்வதேச வீரராக இருக்கிறீர்கள். நீங்கள் கோலியை பற்றி பேசுகிறீர்கள். சரி பாபர் அசாம் அவுட்டானார். ஆனால் அணியாக உங்களின் செயல்பாடு என்ன? சூழ்நிலைகள் என்பது ஒரு போட்டியில் இரு அணிக்கும் சமமாகவே இருக்கும். அங்கே கேப்டனாக நீங்கள் உங்களுடைய திட்டங்களையும் பவுலர்களையும் பயன்படுத்தி வெற்றியை பெற வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வெற்றி பெறத் தவறினால் விமர்சிக்கப்படுவீர்கள்” என்று கூறினார்..

- Advertisement -