கேரி கிறிஸ்டன் சொன்னது உண்மையா இருந்தா அந்த வீரர்களை தண்டித்தே ஆகனும் – முன்னாள் பாக் வீரர் கருத்து

Ahmed-Shezad
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுகளின் முடிவிலேயே வெளியேறியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் கையில் இருந்த வெற்றியை இந்திய அணியிடம் தாரை வார்த்தது.

அதன்பிறகு எஞ்சியிருந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாஹித் அப்ரிடி, கம்ரான் அக்மல், சோயிப் அக்தர் போன்ற வீரர்களே அவர்களது அணி குறித்து விமர்சித்திருந்தனர். அதோடு பாபர் அசாமின் மோசமான கேப்டன்சி குறித்தும் கட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கேரி கிறிஸ்டன் : பாகிஸ்தான் அணியிடம் ஒற்றுமையே கிடையாது என்றும் அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு அணியே இல்லை. எந்த ஒரு வீரரும் மற்ற வீரரை ஆதரிப்பது கிடையாது. அனைவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அணிக்குள்ளேயே இரண்டு பிரிவு இருக்கிறது. நான் பயிற்சியாளராக வேலை செய்த அணிகளிலேயே இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையை நான் எந்த அணியிடமும் பார்த்ததில்லை என்று தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் கேரி கிறிஸ்டன் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீரர்களை தண்டிக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : எந்த சாக்கு போக்கும் சொல்ல விரும்பல.. எங்களை மன்னிச்சிக்கோங்க.. வருத்தம் தெரிவித்த இலங்கை கேப்டன் – வனிந்து ஹசரங்கா

இதுகுறித்து அவர் பதிவுத்துள்ள அந்த கருத்தில் : பாகிஸ்தான் அணி குறித்து பயிற்சியாளர் சொன்னது உண்மையாக இருந்தால் நிச்சயம் அந்த வீரர்களை தண்டிக்க வேண்டும். இப்படி சம்பந்தப்பட்ட வீரர்கள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இனிவரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை நிச்சயம் கவனிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement