ரோஹித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் இவர்தான் அவருக்கு பதில் விளையாடுவார் – வெளியான தகவல்

Rohith-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்ததாக தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டும் வரும் 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

- Advertisement -

அதன் பிறகு இந்தியா வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு இன்று 21 ஆம் தேதி கொல்கத்தாவில் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு குழு கூட்டம் முடிந்த பிறகு அணி விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் துவக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக விளையாடி வரும் ரோஹித்தின் பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதுபோல தற்போது இந்தத் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

agarwal 3

இந்நிலையில் திட்டமிட்டபடி ரோஹித்துக்கு ஓய்வு உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் ஒருநாள் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெறுவார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அகர்வால் ஒருநாள் போட்டிக்கும் தகுதியானவர் தான் என்று பல முன்னாள் வீரர்களும் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement