நான் பார்ம் இன்றி தடுமாறியபோது எனக்கு அறிவுரை கூறி என் கண்களை திறந்தவர் இவரே – மனம்திறந்த மயங்க் அகர்வால்

Agarwal

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இருப்பவர் மயங்க் அகர்வால். இவர் கடந்த வருடம் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். ஷிகர் தவான் சரியாக ஆடாத காரணத்தால் இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தொடக்க வீரராக களம் இறக்கியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அகர்வால் முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது திறமையான பேட்டிங்கை வெளிக்காட்டினார்.

agarwal 3

அதன் பின்னர் இவரது ஆட்டம் சரியத் தொடங்கியது. கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆடியது. அந்த தொடர் முழுவதும் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவரது ஆட்டம் பழுதடைந்து மோசமாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தை மீட்டெடுக்க ரோகித் சர்மா தான் தனக்கு உதவியாக தற்போது தெரிவித்துள்ளார்.

இஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு வர்ணனையாளர் சஞ்சயுடன் நடந்த உரையாடலில் அவர் கூறியதாவது : வெஸ்ட்இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் நான் சோர்வடைந்து விட்டேன். எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டுவிட்டது. என்ன நடந்து கொண்டிருக்கிறது. நன்றாக துவங்குகிறேன். திட்டமிட்டு ஆடுகிறேன். ஆனால் ஏன் ஆட்டம் சரியாக வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்

Agarwal

அப்போது ரோகித் சர்மா என் அருகில் இருந்தார். அவர் கூறிய அறிவுரை என் கண்ணை திறந்தது . அதாவது நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய முதல் நாள் ஆட்டத்திற்கும் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கும் வித்தியாசம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். நன்றாக ஆடவேண்டும் என்ற அழுத்தத்தில் நான் ஆடுவதை சரியாகக் கூறினார்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியையும் முதல் போட்டியாக நினைத்து ஆட வேண்டும் என்ற அறிவுரை சொன்னார். பின்னர் அந்த அறிவுரையை நான் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அதை தான் பின்பற்ற முயற்சி செய்து வருகிறேன் என்று கூறினார். மயங்க் அகர்வால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் திணறிக் கொண்டிருந்த வேளையில் அந்த தொடரில் 102 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

agarwal 1

தொடர்ந்து டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களமிறங்கி வரும் அகர்வால் ஒருநாள் அணிக்கும் துவக்க வீரராக கடந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான ரன் குவிப்பை வழங்கி இந்திய அணியில் இடம்பிடித்த அகர்வால் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.