டிராவிட் சார் சொன்ன இந்த ஒரு விஷயம் தான் என்னை பெரிய ரன் குவிப்பிற்கு கொண்டு சென்றது – மாயங்க் அகர்வால்

dravid agarwal
Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் மாயங்க் அகர்வால் தனது டெஸ்ட் கெரியரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். அதோடு மும்பை டெஸ்டுக்கு முன்னர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 50+ ரன்களை கடக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 150+ ரன்களை அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.

agarwal

இந்திய அணி இந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய அவரது ரன் குவிப்பும் காரணமாக அமைந்தது. தனது டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்கும்போது துவக்க வீரருக்கான முதல் தேர்வாக இருந்த இவர் அதன்பிறகு ராகுல் ரோஹித் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் தனது இடத்தை இழந்தார். இந்நிலையில் தற்போது ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் ஓய்வில் இருந்த வேளையில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா செல்லும் சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த மும்பை டெஸ்ட் போட்டியின் போது ராகுல் டிராவிடின் அறிவுரை எந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு உதவியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டிராவிட் சார் மும்பை போட்டிக்கு முன்னர் என்னிடம் வந்து “எனக்குத் தெரியும் நீ சமீபகாலமாகவே அதிக ரன்களை குவிக்கவில்லை”, இருந்தாலும் உனது மன ஓட்டங்களை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உன்னுடைய மனதளவில் நீ தடைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால்தான் போட்டியின் போது நல்ல தெளிவான மனநிலை கிடைக்கும். எனவே மனதளவில் போட்டியில் பெரிய ரன்கள் அடிக்க தயாராக இரு நிச்சயம் அது உனக்கு உதவும் என்று கூறினார்.

agarwal 1

மேலும் டெக்னிக்கலாக உனது பேட்டிங்கில் எவ்வித மாற்றமும் தேவையில்லை நிச்சயம் உன்னால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என்றும் எனக்கு சில அட்வைஸ்களை கொடுத்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. டெக்னிக்கலாக நாம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம். மனதளவில் நாம் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்தால் போதும் நிச்சயம் பெரிய ஸ்கோர் வரும் என்று எண்ணினேன்.

இதையும் படிங்க : 2019 உலகக்கோப்பை அணியில் அந்த 2 பேர்ல ஒருத்தர சேத்திருக்கனும் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

அதன்படி மும்பை டெஸ்ட் போட்டியின்போது ஒருமித்த மனதோடு, ஒரே நோக்கத்தோடு ரன்களை குவிக்க வேண்டும் என்று விளையாடினேன். அதன்படி முதல் இன்னிங்சின் போது சதம், இரண்டாவது இன்னிங்சின் போது அரைசதம் வந்தது. என்னுடைய பார்மை மீட்பதற்கு டிராவிட் கொடுத்த அந்த அறிவுரைகளும் ஒரு காரணம் என்று மாயங்க் அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement