மே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Dhawan

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

Dhawan

இந்நிலையில் இந்த டி20 தொடர் முடித்து வரும் 15ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடதுகை துவக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்று இருந்தார். ஆனால் சையது முஷ்டாக் அலி தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டி20 போட்டியில் விளையாட முடியாமல் போனது.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்தும் தவான் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

dhawan

அதன்படி தையல் போடப்பட்ட காயம் குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்பதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக இந்திய அணியின் டெஸ்ட் துவக்கவீரர் மாயங்க் அகர்வால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

agarwal 3

டெஸ்ட் அணியில் துவக்கவீரராக சிறப்பாக செயல்பட்டு வரும் அகர்வாலுக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அகர்வால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி நடந்து முடிந்த உள்ளூர் போட்டிகளான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.