களமிறங்க போகும் 2 புதிய வீரர்கள்.! தோல்வியால் இந்திய அணி எடுத்த திடீர் முடிவு.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் மூன்று போட்டிகளின் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிக்க அடுத்த வாரம் தேர்வுக்குழு ஆலோசனை நடைபெற உள்ளது இந்த ஆலோசனைக்கு பிறகு இந்திய அணிக்கான வீரர்கள் கடைசி இரண்டு போட்டிகளுக்கு தேர்வாவர்கள்.

prithivi

சமீபமாக சொதப்பி வரும் வீரர்களை நீக்க அதிக வாய்ப்புள்ளது அவர்களை நீக்கி விட்டு இந்திய ஏ அணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக சமீபத்தில் சிறப்பாக ரன்களை குவித்து வரும் இளம் வீரர்களான மாயங்க் அகர்வால் மற்றும் ப்ரிதிவி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது இவர்கள் இருவரும் சமீபமாக அடித்து நொறுக்கி வருகிறார்கள்

மாயங்க் அகர்வால் வேற லெவல் பார்மில் உள்ளார் ஐ.பி.எல் போட்டியின் போது கூட விளாசி தள்ளினார். அண்டர் 19 கேப்டனாக இருந்த ப்ரிதிவி ஷாவும் சிறப்பாக ஆடிவாருகிறார் அவரது பேட்டிங் ஸ்டைல் சச்சின் போன்று உள்ளதாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். கடைசியாக இந்திய அணி ஆடிய 2போட்டியில் கோலி தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை

mayank

குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் சிரமப்படுவதால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஜோடியில் மாற்றம் இருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. நடுவரிசையும் அவ்வளவு பலம் இல்லை வெளிநாடுகளில் ஆடும்போது தொடக்க ஜோடி பலமாக அடித்தளம் அமைத்தால் தான் நடுவரிசை ஆட்டக்காரர்கள் அழுத்தம் இல்லாமல் ஆட முடியும் காத்திருப்போம் கடைசி போட்டி வரை மாற்றம் நிகழுமா என்று..