இந்திய அணியின் டெஸ்ட் அணியின் துவக்க வீரரான மாயங்க் அகர்வால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். மேலும் இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அகர்வால் விளையாடி வருவதால் வங்கதேச டி20 தொடரில் இவர் தேர்வாகவில்லை.

இதனால் அவர் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டிக்கு கர்நாடக அணி சார்பாக விளையாட வந்தார். அப்படி நேற்று தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி அவுட்டாகாமல் அதிரடியாக 69 ரன்கள் குவித்தார் இதில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அடங்கும்.
அவருடைய அதிரடி மற்றும் ராகுலின் நிதான ஆட்டம் இவை இரண்டும் கர்நாடக அணி இந்த வருட விஜய ஹசாரே கோப்பையை கைப்பற்றிய உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த அடுத்த நாளே அவர் கர்நாடக அணிக்காக விளையாட கிளம்பியதும் அகர்வால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதனை போன்ற தமிழ்நாடு அணிக்காக அஸ்வினும் நேற்று விஜய் ஹசாரே இறுதி போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. தான் செய்ய வந்த டியூட்டியை நேற்று அகர்வால் சிறப்பாக நிறைவுசெய்தார் என்று அகர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



