நடராஜனுக்கு தமிழில் அட்வைஸ் கொடுத்த மற்றொரு இந்திய வீரர். இவருக்கு தமிழ் தெரியுமா ? – விவரம் இதோ

Nattu
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. முன்பெப்பொழுதும் இல்லாத வகையில் வழக்கத்திற்கு மாறாக இந்த இந்திய அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அதுமட்டுமின்றி தமிழ் பேச தெரிந்த வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். இதனை நாம் இந்த ஆஸ்திரேலிய தொடரில் கண்டு வருகிறோம்.

nattu 1

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், வாசிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், கே எல் ராகுல், விஹாரி, சஞ்சு சாம்சன் என பல தென் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக மிகச் சரளமாக தென்னிந்திய மொழிகளில் இவர்கள் உரையாடிக் கொள்கின்றனர். குறிப்பாக பலரும் தமிழ் மொழியில் பேசிக் கொள்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 3-வது டெஸ்ட் போட்டியின்போது சரளமாக தமிழில் பேசிக்கொண்டனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஹனுமா விஹாரிக்கு தமிழில்தான் தனது நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருந்தார். இது வீடியோவாக வெளியாகி தமிழக ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

nattu 2

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தங்கராசு நடராஜன் ஆகியோர் தமிழ் தெரிந்த பந்துவீச்சாளர்கள் ஆக இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரான மயங்க் அகர்வால் தமிழக வீரர்களிடம் மைதானத்தில் தமிழில் பேசி வருகிறார். தமிழக வீரர் நடராஜன் பந்துவீசி கொண்டிருந்தபோது..

nattu 3

‘’மச்சி இப்படி போடு மச்சி வெளியே போடு, நல்லா இருக்கு நல்லா இருக்கு கன்டினியூ பண்ணு என்று தொடர்ந்து தமிழில் தான் நடராஜனுக்கு அறிவுரை கூறி வந்தார். இவர் தமிழில் பேசியது தற்போது ஒரு வீடியோவாக வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisement