அடித்ததே மொத்தம் 3 சதம் தான். அதற்குள் அசாருதீன் சாதனையை சமன் செய்த அகர்வால் – என்ன சாதனை தெரியுமா ?

Azharuddin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Rahane

- Advertisement -

அதனை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தை அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையை சமன் செய்துள்ளார்.

அந்த சாதனையை யாதெனில் இந்திய மண்ணில் விளையாடிய முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை அசாருதீன் வைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது இந்தியாவில் தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அகர்வால் இந்த 3 ஆவது சதத்தின் மூலம் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Agarwal

இந்திய அணி வீரர்களான அகர்வால் 118 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் விளையாடிவருகின்றனர். இந்திய அணி தற்போதுவரை பங்களாதேஷ் அணியை விட 85 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement