டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : 4 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இவரே விளையாட வேண்டும் – அகார்க்கர் கருத்து

Agarkar

உலக டெஸ்ட சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இது ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்பதே இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கனவாக இருக்கிறது. எனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களால் முடிந்த ஆலோசனைகளை இந்திய வீரர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அஜித் அகர்கர், இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர்களாக யாரெல்லாம் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆலோசனையை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

INDvsNZ

உலகிலேயே பலம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்களை இந்திய அணி வைத்துள்ளது. வேகப்பந்து வீச்சே கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக இருந்து வந்துள்ளது. இந்த இறுதிப் போட்டியிலும் அவர்களின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகும். ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் முஹம்மது ஷமி ஆகியோருடன் மூன்றாவது வேகப் பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா அணிக்குள் இடம்பெற வேண்டும். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரின் செயல்பாடு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் சவுத்தாம்டன் மைதானம் வேகப் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த மைதானத்தின் தன்மையை நன்கு தெரிந்துகொண்ட பின் இந்திய அணியானது நான்காவது வேகப் பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் முடிவை எடுக்க வேண்டும் என்று கூறிய அகர்கர் அதுபற்றி பேசியதாவது, மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள் இடம்பிடிப்பது கட்டாயமான ஒன்றாகும். ஆனால் விளையாட இருக்கும் மைதானத்தின் பிட்ச்சில் புற்கள் வளர்க்கப்பட்டிருந்தால், அது நிச்சயமாக ஸ்விங் பவுலிங்கிற்குதான் அதிகமாக ஒத்துழைக்கும். அதுபோன்ற சமயத்தில் இந்திய அணியானது நான்காவது பௌலருடன் களமிறங்க வேண்டும்.

bumrah

மேலும் இந்த போட்டிக்கு பயன்படுத்தப் போகும் டியூக் வகை பந்துகள் இந்த மாதிரியான ஆடுகளங்களில் அதிகமாகவே ஸ்விங் ஆகும் என்பதால் அது வேகப் பந்து வீச்சுக்கு நன்றாகவே ஒத்துழைக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப் பந்து வீச்சாளரானா ஜீஸ்பிரித் பும்ரா, அந்த தொடரில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

siraj

எனவே இந்த இறுதிப் போட்டியிலும் அவரே இந்திய அணியின் மிக முக்கிய பவுலராக கருதப்படுகிறார். ஒருவேளை இந்திய அணி நான்காவது வேகப் பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் அந்த இடத்திற்கு முஹம்மது சிராஜ் தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement