அவங்க 2 பேரும் மீண்டும் இந்திய அணியில் ஒன்னா விளையாட இலங்கை தொடர்ல வாய்ப்பிருக்கு – அகார்கர் கருத்து

agarkar

இந்திய அணியில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இணைந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து சற்று பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்டபோது இவர்கள் இருவரும் இந்த அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வந்தனர். மேலும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் ஒன்றாக இணைந்து விளையாடினர்.

Chahal

அதன் பின்னர் தங்களது பார்ம் அவுட் காரணமாக இதுவரை ஒன்றாக விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவை அணியில் இருந்து முற்றிலுமாக ஓரம்கட்டிய இந்திய அணி சாஹலுக்கு மட்டும் டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவர் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான அகார்கர் அளித்த பேட்டியில் நிச்சயம் இத்தொடரில் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் இணைந்து விளையாட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை குல்தீப்புக்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் பல தொடர்களில் புறக்கணிக்கப்பட்டார்.

kuldeep

இந்நிலையில் மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் நல்ல தன்னம்பிக்கையுடன் திரும்பி வருவார். சாஹலுடன் அவரும் தற்போது இணைந்து விளையாடும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர்களுக்கு இத்தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Chahal

மேலும் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் பார்ம் அவுட் ஆன பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோடி சற்று வருத்தப்படும் அளவிலேயே உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ராகுல் சாகர் வரும் சக்கரவர்த்தி போன்றோர் வந்துள்ளதால் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பும் கிடைத்து விட்டது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement