டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : என்னென்ன சவால்கள் இந்திய அணிக்கு இருக்கும் – முழுமையாக விவரித்த அகார்கர்

Agarkar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது சமூக வலைதளம் வாயிலாக வெளியாகி வர ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் இந்திய அணி அங்கு எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

INDvsNZ

- Advertisement -

இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் நாம் எவ்வாறு விளையாடினோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பின்னர் மீண்டு வந்து சிறப்பாக விளையாடினோம். மீண்டும் அதே போன்று தான் ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்தது.

அதனை எல்லாம் நினைத்துப் பார்த்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆஸ்திரேலிய தொடரின் போது முகமது ஷமி போன்ற நம்பர் ஒன் பவுலர்கள் இருந்தாலும் இளம் வீரர்களின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய தொடரின் கடைசி போட்டியின் போது ஷர்துல் தாகூர், சிராஜ், நடராஜன் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியர்களை திறமையாக சமாளித்தனர்.

Thakur

அதனால் அனுபவமும், இளமையும் கொண்ட அணியால் எதையும் செய்யமுடியும் என்பதை கடந்த சில ஆண்டுகளாகவே நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் காண்பித்து வருகிறோம். நியூசிலாந்து அணியிலும் நம்மைப்போலவே தகுதியான பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். போல்ட், சவுதி, ஜேமிசன் போன்ற பவுலர்கள் பந்தினை எந்த புறமும் திருப்பும் தன்மை உடையவர்கள். அதுமட்டுமின்றி நீல் வாக்னரும் எப்பொழுது விக்கெட் வேண்டுமோ அப்போது எல்லாம் விக்கெட்டை கைப்பற்றும் ஒருவராக இருக்கிறார்.

IND

என்னதான் நாம் ஆஸ்திரேலியாவின் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இங்கிலாந்தின் மைதானம் மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவை இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும். அதனால் இந்திய அணி வீரர்கள் தங்களை சரியாக தயார்ப்படுத்திக் கொண்டு இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement