4 டெஸ்ட் மேட்ச்ல ஒரு போட்டியில் கூட சேன்ஸ் கொடுக்கல. ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு – அகார்கர் ஓபன்டாக்

Agarkar
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் துவங்கி தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன.

sundar 3

- Advertisement -

நான்காவது போட்டிக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, கேஎல் ராகுல் என பல இந்திய வீரர்கள் காயமடைந்தனர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். ரவீந்திர ஜடேஜவிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தங்கராசு நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்து அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில்:

Kuldeep

” நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது ” எனக்கு வியப்பை அளிக்கிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இடம்பெறாதது. அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் அணியில் சேர்க்கப்படாமல் வெளியில் அமரவைக்கப்பட்டுள்ளதால் அவருடைய நம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. பயிற்சி போட்டியில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அவர் வருத்தத்தில் இருப்பார் என்று அகார்கர் கூறியுள்ளார்..

umesh kuldeep

குல்தீப் யாதவ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். புதிய இளம் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் அவர்களுடன் சரியாக போட்டி போட முடியாமலும் அணிக்கு உள்ளேயும் வெளியேவும் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement