ரிட்டயர்டு ஆகறதுக்குள்ள கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைப்பார் – அகார்கர் உறுதி

Agarkar

இந்திய கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். துவக்கத்தில் தடுமாறிய கோலியை தொடர்ந்து தனது கையில் வைத்திருந்து சிறந்த வீரராக தோனி மாற்றினார். தற்போது 3 வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக திகழும் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி விட்டுச்சென்ற வழியில் இந்திய அணியை கேப்டன் கோலி திறம்பட வழிநடத்தி வருகிறார்.

Kohli

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கோலியின் இந்த 12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசுகையில் : நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கோலி 300 ரன்களை அடிப்பார் என நான் நம்புகிறேன்.

இப்போதுவரை விரேந்திர சேவாக், கருண் நாயர் ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்களை இந்திய அணிக்காக அடித்துள்ளனர். நிச்சயம் கோலியால் அந்த சாதனையை செய்ய முடியும். அவரிடம் அந்த திறனும், உத்வேகமும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Kohli-1

நிச்சயம் ஓய்வு பெறுவதற்கு முன்பு அந்த சாதனையை கோலி நிகழ்த்துவார் இது மட்டுமல்லாமல் மேலும் பல சாதனைகளையும் முறியடிப்பார். கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ அவர் வந்து 20 ஆண்டுகள் முடிவடைந்து போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஏனெனில் அவர் அவ்வளவு அருமையாக தனது திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.

- Advertisement -

Kohli-3

இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அகார்கர் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 53.6 ரன்கள் சராசரியுடன் 7240 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்து சச்சினுக்கு அடுத்து அதிகபட்ச சதங்களை அடித்த வீரராக கோலி திகழ்வது குறிப்பிடத்தக்கது.