கிரிக்கெட்டில் பிட்னெஸ் என்பது சில ஆண்டுகளாக தான் பின்பற்றி வரப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் உலகில் பிட்னெஸ் என்பது அதிகம் கவனிக்கப்பட்டதாக ஒரு விடயமாக தான் இருந்தது. ஆனால், தற்போது அனைத்து கிரிக்கெட் வீரர்களுமே தங்களது பிட்னெஸ் குறித்து அதிக கவனத்தை செலுத்தி வருகின்றாரனார்.
கிரிக்கெட் அணி நிர்வாகமும் வீரர்களை பிட்டாக இருக்கவே அறிவுறித்தி வருகின்றது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களின் பிட்னெஸை உறுதி செய்யும் வகையில் ‘யோ யோ’ டெஸ்ட் என்ற பிட்னெஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் தேர்வாகவும் வீரர்களை மட்டுமே விளையாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்கின்றது.
இந்நிலையில் கடத்த ஆண்டு நடைபெற்ற ‘யோ யோ’ தேர்வில் இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரைனா தோல்வியடைந்தார். சமீப காலமாக தனது உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்த ரெய்னா சற்று உடல் எடை கூடி மந்தமாக மாறிவிட்டார். ஆனால் தற்போது மீண்டும் தனது உடற்பயிற்சிகளை மும்மர படுத்தியுள்ளார் ரெய்னா.
தற்போது இந்திய அணியில் இடம் பெறாத ரெய்னா எப்படியாவது மீண்டும் தனது உடலை பிட்டாக மற்ற வேண்டும் என்று பல்வேறு உடற்பயிச்சிகளை செய்து வருகிறார். இதற்காக தனியாக ஒரு பிட்னஸ் பயிற்சியாளரை நியமித்து உடற் பயிற்ச்சிகளை செய்து வருகிறார். மேலும், தான் உடற்பயிற்ச்சி செய்யும் விடீயோக்களையும் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.