80 ஆண்டுகளுக்கு பிறகு.! இங்கிலாந்து அணி செய்த சாதனை.! ரொம்ப மோசம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பிறகு முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குக் மற்றும் ஜென்னிங்ஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்தார். முதலில் இஷாந்த் பண்டுஹவீச்சில் குக் வெளியேற, அடுத்து ஜென்னிங்ஸ் பும்ரா பந்தில் வெளியேறினார்.

pandi

- Advertisement -

இதன் பிறகு இங்கிலாந்து அணியின் சரிவினை தடுக்க முடியவில்லை. அடுத்து வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேற, பட்லர் மட்டும் தாக்கு பிடித்து சற்று அதிரடியாக ஆடினார். அவர் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார். இவரது இந்த இன்னிங்ஸ் இங்கிலாந்து அணியை சற்று ஆறுதல் படுத்தியது. முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப்போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் ஆடி வந்த இங்கிலாந்து அணி, ஒரே “session”-ல் ஆல் அவுட் ஆனது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 1938 ஆம் ஆண்டு தான் அவர்களது மண்ணில் நடைபெற்ற போட்டியில் ஒரே “Session”-ல் ஆல் அவுட் ஆகியது. எனவே, நேற்று 80 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு மோசமான சாதனையை இங்கிலாந்து அணி பதிவு செய்துள்ளது.

pandi 2

இந்திய அணி தரப்பில் ஹர்டிக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுவே அவருடைய டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இங்கிலாந்து அணியின் தொடர் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இவரது பந்து வீச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement