பங்களாதேஷை விரட்டியடித்த அஃப்கானிஸ்தான்.! கிரிக்கெட்டில் அஃப்கானிஸ்தான் புதிய சாதனை..!

- Advertisement -

கிரிக்கெட் உலகில் கடைக்குட்டி அணியாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியுடம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 3வது போட்டியில் வங்கதேச அணியுடன் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது இளம் ஆப்கானிஸ்தான் அணி.

afghanistan

- Advertisement -

இம்மாதம் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் அணியின் ஆதிக்கம் இருந்து வந்தது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ,வங்கதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரா வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது போட்டியிலும் 6 விக்கெட் உத்யாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரின் 3வது டி20 போட்டி நேற்று (ஜூன்7) டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைத்தானத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சென்வாரி 33 ரன்களை முஹம்மத் ஷஷாத் 26 ரன்களும் அடித்தனர்.

afganisthan

பின்னர் 146 ரன்கள் எடுத்தால் இந்த தொடரில் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்று களமிறங்கியது வங்கதேச அணி. ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக ஆடிய வங்கதேச அணி ஒரு புறம் விக்கெடுகளையும் சீரான இடைவெளியில் இழந்து வந்தது . ஒரு கட்டத்தில் இந்த போட்டியின் 19 ஓவரில் கரீம் வீசிய பந்தை எதிர்கொண்ட ரஹீம் தொடர்ந்து 5 பௌண்டரிகளை விளாசினர். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை எடுத்தார் ரஹீம். இதனால் வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானதுஇறுதி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பௌலர் ரசீத் கான் பந்தை வீசினர். அந்த ஓவரின் முதல் பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நஜிபுல்லா அவுட் ஆனார்.

rashidkhan

பின்னர் களத்தில் இருந்த ஹக்கி மற்றும் முஹமதுல்லா 1,2,1,1 என்ற ரன்களை எடுத்தனர். இறுதி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பந்தை பௌண்டேரிக்கு விலாசினார் ஹக்கி. ஆனால் அந்த பந்தை எப்படியோ பவுண்டரி செல்லாமல் எல்லைக் கோட்டின் மிக அருகில் தடுத்தார் ஷபிக்ஹல்லா. அதற்குள் 3 ரன்களை ஓடிவிட்டனர். 4 வது ரன் ஓடும் போது பந்து கீப்பரிடம் வர முஹமதுல்லா ரன் அவுட் ஆனார். ஆனால் அந்த பந்து பௌண்டரியா, இல்லையா என்று சந்தேகம் எழ 3 வது நடுவர் அந்த பந்தை சரி பார்த்தனர். இறுதியில் அது பௌண்டரி இல்லை என்று உறுதியானது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Advertisement