காயம்பட்ட சிங்கமாய் பாகிஸ்தான் வராங்க.. இந்தியாவுக்கு அவர் கைகொடுக்கனும்.. எச்சரித்த தாரே, இக்பால்

Tamim Iqbal
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இப்போட்டிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இவ்விரு அணிகளில் உலகக் கோப்பைகளில் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடி நிறைய வெற்றிகளை கண்டுள்ளது.

அத்துடன் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. மறுபுறம் இந்தியாவிடம் காலம் காலமாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்விகளை சந்தித்து வருகிறது. போதாக்குறைக்கு இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

காயம்பட்ட பாகிஸ்தான்:
அதனால் இம்முறை பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனையை போல தோல்வியிலிருந்து வரும் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி இந்தியாவை முன்னாள் வீரர் ஆதித்யா தாரே எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டிக்கு முன்பாக இந்தியா அல்லது பாகிஸ்தான் எந்தளவுக்கு நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது என்பது முக்கியமல்ல”

“இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதே முக்கியமானதாகும். ஃபார்ம், மைதானம், போட்டி எப்போது நடக்கிறது என்பதைத் தாண்டி அதை சில வீரர்கள் விரும்புவார்கள் சில வீரர்கள் அழுத்தத்தில் திணறுவார்கள். ஆனால் ரசிகர்களை பொறுத்த வரை அது மகத்தான போட்டியாக இருக்கும். தோல்வியிலிருந்து வரும் போது பாகிஸ்தான் மிகுந்த ஆபத்தான அணியாக இருக்கும். எனவே வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது போல் நாம் இப்போட்டியில் செயல்படுவது நல்லது”

- Advertisement -

“ஏனெனில் தோல்விக்கு பின் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வங்கதேச கேப்டன் தமீம் இக்பால் இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் சர்மா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேன் மட்டுமின்றி கேப்டனாகவும் ரோகித் சர்மா மிகவும் முக்கியமானவர். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அனைத்து பவுலர்களிடமும் பயத்தை ஏற்படுத்தக் கூடியவர்”

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி அந்த டீமுக்கு தான் போறீங்களா? – கேள்வியெழுப்பிய புகைப்படம்

“ஏனெனில் நீங்கள் பிட்ச் அப் செய்தால் அவர் உங்களை கவர் திசையில் அடிப்பார். ஷார்ட் பந்தை வீசினால் ஃபுல் அல்லது ஹூக் ஷாட்டை பயன்படுத்தி அடிப்பார். அவர் விளையாடுவதை நான் எப்போதும் விரும்பி பார்ப்பேன். லேசான காயத்தை சந்தித்த அவர் இந்தியாவுக்காக முடிந்த அனைத்தையும் செய்வார். இது தம்முடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பதால் அவர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் நெருப்பாக செயல்படுவார்” என்று கூறினார்.

Advertisement