BCCI : இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த பி.சி.சி.ஐ – வெளியான அறிவிப்பு

IND
Advertisement

உலக அளவில் மிக பிரபலமாக இருந்து வரும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணிக்கு என்றும் ரசிகர்கள் பட்டாலும் உலகம் முழுவதும் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கும், அணியின் வீரர்களுக்கும் ஏகப்பட்ட சலுகைகள் ஸ்பான்ஸர்கள் மூலமாக கிடைத்து வருகின்றன. அந்த வகையில் வீரர்களின் சீருடை, உபகரணங்கள் என பல்வேறு விடயங்களுக்கும் ஸ்பான்சர்கள் மூலமாக கிடைத்து வருகிறது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக “அடிடாஸ்” நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டதாக பிசிசிஐ நிர்வாகத்தின் செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் :

- Advertisement -

இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உலகின் முன்னணி விளையாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ளோம் என “அடிடாஸ்” நிறுவனத்தினை குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் என்கிற மதிப்பில் அவர்களுடன் இந்த ஒப்பந்தமானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

adidas

தற்போதைய இந்திய அணியின் கிட்ஸ் ஸ்பான்சராக இருந்து வரும் கில்லர் ஜீன்ஸ், MPL காண்ட்ராக்ட் வரும் மே 31-ஆம் தேதி முதல் முடிவடைகிறது. அதன் பின்னர் அடிடாஸ் இந்திய அணியின் கிட்ஸ் ஸ்பான்சராக அதிகாரபூர்வமாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்திய அணியானது அடுத்ததாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement