இந்தியா 36க்கு அவுட்டான அடிலெய்ட் பிட்ச் இம்முறை எப்படி இருக்கும்? மைதான பராமரிப்பாளர் பேட்டி

Damien Hough
- Advertisement -

அடிலெய்ட் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்குகிறது. இளஞ்சிவப்பு நிற பந்தில் பகல் இரவாக நடைபெற உள்ள அப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா போராட உள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இருப்பினும் அடிலெய்ட் மைதானத்தில் கடைசியாக இந்தியா விளையாடிய போட்டியில் 36க்கு ஆல் அவுட்டானது ரசிகர்களுக்கு இப்போதும் கொஞ்சம் கலக்கத்தை கொடுப்பதாக இருக்கிறது. இந்நிலையில் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின பிட்ச் வழக்கமான ஒன்றாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் டேமின் ஹுக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அடிலெய்ட் பிட்ச்:

“யார் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிறப்பாக விளையாடும் அணி வெல்லும். அது வழக்கமான அடிலெய்ட் ஓவல் பிட்ச் போல இருக்கும். அதில் அனைவருக்கும் உதவி கிடைக்கும் என்று நம்பலாம். 2015 முதலில் நாங்கள் இங்கே அதே மாதிரியான ஒரு ஸ்டைலை கொண்ட பிட்ச்சை உள்ளூர் போட்டிகளுக்கு கூட பயன்படுத்துகிறோம். அதற்கு முன் நாங்கள் செயற்கையாக பொருத்தப்பட்ட பிட்ச்சை பயன்படுத்தினோம்”

“அதில் புற்கள் இருக்கும் என்பதால் ஆரம்ப நாட்களில் இளஞ்சிவப்பு நிற பந்துக்கு நிறைய உதவி செய்யும். காய்ந்த கடினமான புற்கள் கொஞ்சம் இருக்க விடுவதே எங்களுடைய இலக்காகும். எனவே போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவு இருக்கலாம். இரவு நேரங்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தப்படும். பவுலர்கள் இரவு நேரத்தில் புதிய பந்தை பிடித்து வீசினால் போட்டி பொழுதுபோக்காக இருக்கும்”

- Advertisement -

பேட்ஸ்மேன்களுக்கு சவால்:

“அப்படி இருக்கும் வகையில் ஆடுகளத்தை உருவாக்குவதே எங்களுடைய திட்டம். அது எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார். மேலும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் அல்லது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் எதுவும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார். இதிலிருந்து இம்முறையும் அடிலெய்ட் மைதானத்தில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: 800 விக்கெட்ஸ்.. இது தான் இந்தியாவின் தரம்.. அதுக்காக ஈஸியா விடமாட்டோம்.. லயன் பாராட்டுடன் சவால்

குறிப்பாக இரவு நேரத்தில் இளஞ்சிவப்பு நிற பந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவால் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்பின்னர்கள் கடைசி கட்ட நாட்களில் சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம். எனவே பேட்ஸ்மேன்கள் அங்கே பெரிய ரன்கள் குவிப்பதற்கு செட்டிலாகி விளையாடுவது அவசியமாகும்.

Advertisement