இவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். நான் பார்த்து கஷ்டப்பட்ட வீரர் இவர்தான் – ஆடம் சாம்பா பேட்டி

Zampa

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Ind vs Aus

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் இந்திய அணி இன்றைய போட்டியில் முழுமுனைப்புடன் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சாம்பா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பௌலிங் செய்யும்போது நமக்கு கொஞ்சம் பொறுமை தேவை பேட்ஸ்மேன்கள் நமது மோசமான பந்தை பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து விட்டால் நாம் தொடர்ந்து சோர்ந்து போகக்கூடாது இதுவே நான் கற்றுக்கொண்ட பாடம். தாக்குதல் ஆட்டமுறை எப்போதும் தேவை.

zampa 1

நாம் கொஞ்சம் சோர்ந்து செல்லும்போது நம்மை எதிர்த்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். அதனால் நாம் பதட்டமில்லாமல் தொடர்ந்து நிலையான பந்துவீச்சை வழங்க வேண்டும். இந்தியாவில் இத்தகைய வீரர்களுக்கு எதிராக ஆடும்போது நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.விராட் கோலியை நான் சில சமயங்களில் வீழ்த்தி இருக்கிறன். இருப்பினும் அவர் எனது பந்துவீச்சில் 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

- Advertisement -

Zampa 1

கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். நான்கு முறை அவரை வீழ்த்தி இருந்தாலும் மோசமான பந்துகளை அவர் விளாசும் போது நான் அதனால் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் வீசியதிலேயே எனது பந்துவீச்சிற்கு எதிரே மிக கடினமான வீரர் என்றால் அது விராட் கோலி தான். ராஜ்கோட் போட்டியிலும் அவர் என்னை எதிர்கொள்ளும் உத்வேகத்துடன் களமிறங்குவார். எனக்கு பெரிய சவால் காத்திருக்கிறது என்றும் சாம்பா கூறியது குறிப்பிடத்தக்கது.