உலகின் தலைசிறந்த கீப்பர் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நான் இவரைத்தான் கை காட்டுவேன் – மனம்திறந்த கில்க்ரிஸ்ட்

Gilchrist

147 வருட கிரிக்கெட் வரலாற்றில் நூற்றுக்கணக்கான விக்கெட் கீப்பர்கள் விளையாடியிருக்கிறார்கள். இப்படி பலர் விளையாடி இருந்தாலும் ஒரு சில விக்கெட் கீப்பர்கள் பெயர் மட்டுமே தற்போது நமக்கு ஞாபகம் இருக்கும். அந்த அளவிற்கு அவர்கள் தங்களது துறையில் திறமையை நிரூபித்து இருப்பார்கள்.

Keeper

ஆடம் கில்கிறிஸ்ட், எம்எஸ் தோனி, குமார் சங்ககாரா, பிரண்டன் மெக்கல்லம், மார்க் பவுச்சர் என பலவித விக்கெட் கீப்பர்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் உலகின் மிக சிறந்த விக்கெட் கீப்பர் களில் ஒருவராக இருந்த ஆடம் கில்கிரிஸ்ட் ஒரு விக்கெட் கீப்பரை கைகாட்டி அவர்தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ளார்,

அவர் கூறுகையில்,,, உலகில் குமார் சங்ககாரா, பிரண்டன் மெக்கல்லம் போன்ற பல விக்கெட் கீப்பர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தோனியை பாருங்கள் அவர்தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கமுடியும். இந்திய ரசிகர்கள் என்னை கில்லி என்று அழைக்கிறார்கள். அது எனக்கு ஏன் என்று புரியும், ஆனால் அப்படி அழைக்கப்பட வேண்டியது தோனி .

dhoni

தோனிதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதன் பின்னர்தான் குமார் சங்ககாரா மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் வருகிறார்கள். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை துவக்க காலத்தில் இருந்தது முதல் அவர் இன்று இவ்வளவு பெரிய உயரத்தினை எட்டியவரை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன்.

- Advertisement -

dhoni

திடீரென வந்து ஒரு போட்டியில் சதமடித்தார். அனைவரும் அவரை விரும்பினார்கள். அவரது ஆட்டத்தின் பாணியை கடைப்பிடித்தார். திடீரென கிரிக்கெட் உலகமே மாறியது. தனக்கென்று தனி பாணியை வைத்து இந்தியாவை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றார் என்று கூறியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட். இவ்வளவு உயரத்திற்கு சென்றும் அலட்டிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கும் அவரின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கில்க்ரிஸ்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.