ஆஸ்திரேலியாவில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய 2 நட்சத்திர மூத்த வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தார்கள்.
அதன் காரணமாக அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மா தன்னுடைய ஃபார்மை கண்டறிந்தால் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
கடைசி வாய்ப்பு:
இல்லையெனில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் பும்ரா அதிகமாக காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால் விராட் கோலி கேப்டனாக செயல்படுவதும் நல்ல முடிவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு. “ரோஹித் இங்கிலாந்துக்கு செல்வதை நான் பார்க்கப் போவதில்லை. அவர் தனது செயல்பாடுகளை சொந்த மண்ணில் பார்க்க உள்ளார் என்று கருதுகிறேன்”
“முதலில் அவர் வீட்டுக்கு சென்று தன்னுடைய புதிய குழந்தையை பார்ப்பார். அது அவருக்கு இங்கிலாந்துக்கு செல்வதற்கான உத்வேகத்தை கொடுக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான சூழல்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் அவர் தன்னுடைய ஆட்டத்தை எடுக்க வாய்ப்புள்ளது”
அடுத்த கேப்டன்:
“பும்ரா முழு நேர கேப்டனாக இருப்பாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்தப் பொறுப்பு அவருக்கு சவாலை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே அடுத்த கேப்டன் விராட் கோலியாக கூட இருக்கலாம் என்று நான் கணிக்கிறேன். ஒருவேளை விராட் கோலி மீண்டும் கேப்டனாக செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். தற்சமயத்தில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனை பற்றி சிந்திப்பதை நான் நிறுத்தவில்லை”
இதையும் படிங்க: 142க்கு ஆல் அவுட்.. தீக்சனா சாதனை ஹாட்ரிக் வீண்.. இலங்கையை சுருட்டிய நியூஸிலாந்து அடுத்தடுத்த வெற்றி
“இந்திய அணிக்கு அடுத்ததாக சவாலான காலங்கள் வரவுள்ளது. ஐபிஎல் நிறைய திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களை வைத்து 1 முதல் 11 வரை இந்தியா தங்களுடைய புதிய அணியை உருவாக்க முடியும். ஆனால் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை வைத்து வெற்றிகரமாக செயல்பட முடியாது. எனவே அது இந்திய அணிக்கு கொஞ்சம் சவாலான காலமாக இருக்கும்” எனக் கூறினார்.



