இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டிற்கு கூட கிரிக்கர்டிற்கு ஈடான ரசிகர்கள் கிடையாது . இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் இந்திய கால்பந்து விளையாடிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், இந்திய சிக்கெட் வீரர் கோலி.

உலகில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஒரு விளையிட்டு என்றால் அது கால்பந்து தான். இந்தியாவில் சில வருடங்களாக கால்பந்து விளையட்டுக்கள் அதிகம் நடைபெற்று வருகின்றனர். இதற்காக இந்தியாவில் சில ஆண்டுகளாக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலக அளவில் இந்திய கால்பந்து அணி 97 வது இடத்தில உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 4 நாடுகள் பங்குபெறும் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. நேற்று ஜூன் 2 ஆம் தேதி இந்திய கால்பந்து அணி சீனா அணியை எதிர்கொண்டது, இதில் சீன அணியை 5-0 என்ற கோல் கணக்கில வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய கால்பந்து அணி விளையாடிய இந்த போட்டிக்கு 2000 கும் குறைந்த ரசிகர்களே போட்டியை காண சென்றிருந்தனர்.
This is nothing but a small plea from me to you. Take out a little time and give me a listen. pic.twitter.com/fcOA3qPH8i
— Sunil Chhetri (@chetrisunil11) June 2, 2018
இந்நிலையில் இந்திய கால் பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார், அதில் “இந்த தொடரில் ஐரோப்பிய தரம் இல்லை தான் , நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள், எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.” சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்துள்ளார்.



