முடிஞ்சா சிக்ஸ் அடிக்க சொன்னேன்.. ஆனா ஹீரோ கோலி என்னை 2 வார்த்தையால் வாழ்த்தினாரு.. அப்ரார் நெகிழ்ச்சி

Abrar Ahmed
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரத்தில் 2.30 மணிக்கு துவங்குகிறது. மறுபுறம் இந்தத் தொடரில் சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்த அணியின் ஸ்பின்னர் அப்ரார் அகமது சிறப்பாக பவுலிங் செய்து 10 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். குறிப்பாக 46 ரன்கள் அடித்து சவாலைக் கொடுத்த சுப்மன் கில்லை அவர் கிளீன் போல்ட்டாக்கியது எதிர்ப்புறமிருந்த விராட் கோலியையே வியக்க வைத்தது.

- Advertisement -

ஹீரோவுக்கு ஜாலியான சவால்:

அந்த வகையில் இந்திய அணிக்கு நல்ல சவாலைக் கொடுத்த அப்ரார் அகமதை 10 ஓவர்கள் வீசி முடித்ததுமே விராட் கோலி தோளில் தட்டிப் பாராட்டு தெரிவித்தார். இறுதியில் தமது இளம் வயது ஹீரோ விராட் கோலிக்கு எதிராக பௌலிங் செய்தது மறக்க முடியாது என்று அப்ரார் அகமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் விராட் கோலியிடம் முடிந்தால் சிக்ஸர் அடித்து ப் பாருங்கள் என்று ஜாலியாக சவால் விட்டதாக அப்ரார் அஹ்மத் கூறியுள்ளார்.

இறுதியில் “நன்றாக பௌலிங் செய்தீர்கள்” என்று விராட் கோலி தம்மை பாராட்டியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி அப்ரார் அஹ்மத் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக பௌலிங் செய்ய வேண்டும் என்ற என்னுடைய இளம் வயது கனவு துபாயில் உண்மையானது. அது மிகச்சிறந்த சவாலாக இருந்தது”

- Advertisement -

பாராட்டிய கிங்:

“நான் அந்த தருணத்தை சுதந்திரமாக எடுத்துக்கொண்டு எனக்கு எதிராக சிக்சர் அடியுங்கள் என்று விராட் கோலியிடம் கிண்டலாக சொன்னேன். ஆனால் அதற்காக அவர் கோபப்படவில்லை. விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவர் நல்ல மனிதரும் கூட”

இதையும் படிங்க: நியூஸிலாந்தும் 4க்கு 4 பதிலடி வெச்சுருக்காங்க.. ஃபைனலில் இந்தியாவுக்கு வெற்றி ஈஸியா இருக்காது.. வாசிம் ஜாபர்

“போட்டி முடிந்ததும் நன்றாக பவுலிங் செய்தீர்கள் (வெல் பௌல்ட்) என்று அவர் சொன்னது என்னுடைய நாளை மகிழ்ச்சியாக்கியது. நான் வளரும் போது விராட் கோலியை ரோல் மாடலாக கொண்டிருந்தேன். ஒரு நாள் விராட் கோலிக்கு எதிராக பவுலிங் செய்வேன் என்று எனது அண்டர்-19 வீரர்களிடம் அடிக்கடி தெரிவிப்பேன். அவருடைய ஃபிட்னஸ் அபாரமானது. ரன்கள் எடுப்பதற்காக அவர் ஓடுவது உங்களது கண்களை ஈர்க்கும். அது தான் அவரை தனித்துவமான கிரிக்கெட்டராக காட்சிப்படுத்துகிறது” என்று கூறினார்.

Advertisement