- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 60 ரன்கள் தேவை.. சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜூலை 4-ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டி மழையால் தடைபட்டது.

சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் அபிஷேக் சர்மா :

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் ஒரு முக்கிய சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியின் போது 24 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்கப்போகும் விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை இதுவரை 49 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 1546 ரன்கள் குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் ஆடிய அந்த ஆட்டம் உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய ஒன்று – பார்த்திவ் பட்டேல் கருத்து

அவருக்கு முன்னதாக எட்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 1605 ரன்களுடன் இருக்கிறார். இன்னும் அபிஷேக் ஷர்மாவிற்கு சுரேஷ் ரெய்னாவை முந்த 60 ரன்கள் மட்டுமே தேவை. அதை இந்த போட்டியில் அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி அபிஷேக் சர்மா எட்டாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -