- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட பேட்டை வச்சி அபிஷேக் அரைசதம் அடித்ததில் ஹேப்பி – சுவாரசிய தகவலை பகிர்ந்த இந்திய வீரர்

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது.

அபிஷேக் சர்மா அரைசதம் அடித்த பேட் என்னுடையது : சக வீரர் தகவல்

பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 159 ரன்களுக்கு சுருண்டதால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 52 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் தொடர்ந்து மூன்று டக் அவுட்டாகிய அபிஷேக் ஷர்மா சூப்பர் 8 சுற்றிலும் ஒரே ஒரு அரைசதத்தை மட்டும் தான் பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனம் இருந்தது.

இவ்வேளையில் இறுதி போட்டியில் அதிரடியான துவக்கத்தை அளித்து தனது தேர்வை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா பயன்படுத்திய பேட் என்னுடையது என ஷிவம் துபே சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இதையும் படிங்க : நெனச்சிருந்தா ஈஸியா 3 செஞ்சுரி அடிச்சிருக்கலாம்.. ஆனா டீம் தான் முக்கியம்னு நின்னான் – சாம்சனை புகழ்ந்த அஷ்வின்

அபிஷேக்சர்மா என்னிடம் வந்து இறுதிப் போட்டிக்கு முன்பாக உங்களுடைய பேட் கடன் கேட்கலாமா? என்று கேட்டார். அவர் கேட்டதும் உடனடியாக தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் என்னுடைய பேட்டை கொடுத்து விட்டேன். இறுதிப்போட்டியில் அந்த பேட்டை பயன்படுத்தி அவர் அரைசதம் அடித்ததில் மகிழ்ச்சி என ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்.

- Advertisement -