- Advertisement -
ஐ.பி.எல்

இந்த விஷயத்தில் என்னை விட நீ தான் பெஸ்ட்டா வருவன்னு யுவ்ராஜ் சிங்கே பாராட்டுனாரு.. அபிஷேக் சர்மா பேட்டி

ஐபிஎல் 2024 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன. இம்முறை ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் வெற்றியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு நிகராக அவர் ஓப்பனிங்கில் எதிரணிகளை பந்தாடி வருகிறார்.

அந்த ஜோடியின் அதிரடியால் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்த ஹைதெராபாத் அணி டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்தது. அத்துடன் லக்னோவுக்கு எதிராக 166 ரன்களை 9.2 ஓவரில் சேசிங் செய்த ஹைதராபாத் வரலாற்றுச் சாதனை வெற்றிகளை பெற்றது. அந்த வகையில் இந்த வருடம் 15 போட்டிகளில் 482 ரன்களை 207.76 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள அவர் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளார்.

- Advertisement -

யுவராஜ் சிஷ்யன்:
அத்துடன் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய அவர் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகிய 2 முக்கிய வீரர்களை சாய்த்த அவர் 2024 ஐபிஎல் ஃபைனலுக்கு ஹைதராபாத் தகுதி பெறுவதில் கருப்பு முறையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். அதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எப்படி பந்து வீசுவது என்பதை தம்முடைய அப்பாவிடம் கற்றுக் கொண்டதாக அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் என்னை விட நீ சிறந்த பவுலராக வருவாய் என்று யுவராஜ் சிங் தம்மை பலமுறை பாராட்டியுள்ளதாகவும் அபிஷேக் சர்மா உற்சாகம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஐபிஎல் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் அவர் இடது கை ஸ்பின்னர். அவர் தான் என்னுடைய பந்து வீச்சில் கடினமான வேலை செய்தார். அதனால் என்னுடைய தொடர்ந்து பந்து வீச்சில் ஏதாவது செய்தால் என்னுடைய அணிக்காக வித்தியாசமானதை செய்ய முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். ஜூனியர் அளவில் நிறைய விக்கெட்டுகளை எடுத்ததால் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த வாய்ப்புக்காக என்னுடைய திறமையை பயிற்சியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் நிறைய காண்பித்தேன்”

இதையும் படிங்க: வாங்குன அடியில் அவங்க எழுந்திருப்பது கஷ்டம்.. ஐபிஎல் 2024 ஃபைனல் வின்னரை கணித்த கெவின் பீட்டர்சன்

“ஏனெனில் அவர்கள் என்னை அதிகம் பார்த்ததில்லை. யுவி பாஜியுடன் (யுவராஜ்) பேசும் போதெல்லாம் “என்னை விட நீ சிறந்த பவுலராக வருவாய்” என்று என்னிடம் கூறியுள்ளார். எனவே பந்து வீசுவதை நான் எப்போதும் எனது மனதில் வைத்துள்ளேன். அந்த வகையில் முக்கியமான போட்டியில் நான் என்னுடைய பந்து வீச்சில் அணிக்காக பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -