- Advertisement -
ஆசிய கோப்பை

பாக் பவுலர்ஸ் யார் வந்தாலும் நொறுக்குவதே திட்டம்.. இதுக்கு அவங்க சப்போர்ட் பண்ணாங்க.. தொடர்நாயகன் அபிஷேக்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானை தொடர்ந்து 3வது முறையாக தோற்கடித்த இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. நேற்று துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இந்தியா போராடி 19.4 ஓவரில் 150/5 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24 சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

தொடர்நாயகன் அபிஷேக்:

இந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய போதிலும் அபிஷேக் ஷர்மா தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக ஃபைனல் தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 300+ ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் பவர்ப்ளே ஓவரில் யார் போட்டாலும் அடித்து நொறுக்குவதே தம்முடைய திட்டம் என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி போன்ற வீரர்களை முதல் பந்திலேயே அடித்த நொறுக்க முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு விளையாடுவதற்கு கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொடுத்த ஸ்பெஷல் ஆதரவே காரணம் என்று தெரிவிக்கும் அபிஷேக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தொடர்நாயகன் விருதாக காரை பரிசாக பெறுவது எப்போதும் மகிழ்ச்சி”

- Advertisement -

யாரா இருந்தாலும் அடிப்பேன்:

“(2024) உலகக்கோப்பை வென்ற இந்த அணிக்குள் வந்து துவக்க வீரராக விளையாடுவது எளிதல்ல. ஆனால் நாங்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடும் நோக்கத்தை காட்ட வேண்டும் என்பதே திட்டமாகும். அந்தத் திட்டத்திற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அப்படி விளையாடும் போது உங்களுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஸ்பெஷல் ஆதரவு தேவை. அந்த ஆதரவு எனக்கு தொடர் முழுவதுமே கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியர்களுக்கான வெற்றியைப் பெற அந்த 3 பேர் ஹெல்ப் பண்ணாங்க.. ஆட்டநாயகன் திலக் பேட்டி

“என்னால் தாக்கத்தை ஏற்படுத்தினால் என்னுடைய அணி வெல்லும் என்பதே திட்டமாகும். இப்படி விளையாடும் போது சில நேரங்களில் நீங்கள் தோல்வியடைவீர்கள். அதையும் தாண்டி நீங்கள் செல்ல வேண்டும். அந்த ஆதரவு எனக்கு அணியில் கிடைக்கிறது. இது போன்ற பிட்ச்சில் பவர்பிளேவில் ஸ்பின்னர்களை பார்த்தால் அதை நான் பயன்படுத்திக்கொள்வேன். அது எதிரணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் அவர் யார் என்று பார்க்காமல் முதல் பந்திலேயே அடிக்க விரும்புவேன். அது என்னுடைய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அதையே நான் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -