ஐபிஎல்-லில் விளையாடும் 5 வது இளைய இந்தியர்..! – அறிமுக போட்டியிலே அனைவரையும் கவர்ந்துள்ளார்..! இவர் வயது என்ன தெரியுமா..?

sharma1
- Advertisement -

தனது முதல் போட்டியில் சாதனை படைத்த இளம் வீரர், களமிறங்கிய முதல் ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன் அடித்த முதல் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் டெல்லி அணியின் புதிய வீரரான அபிஷேக் சர்மா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் u19 போட்டிகளில் விளையாடியவர் தற்போது டெல்லி அணியின் புதிய இளம் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

sharma

- Advertisement -

அபிஷேக் சர்மா, 18 வயதாகும் இந்த இளம் வீரர் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் ஏலத்தின் போது டெல்லி அணியால் 55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கபட்டார். ஐ.பி.எல் தொடரின் 45 வது லீக் போட்டி நேற்று (மே 12 ) டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனார்.

பின்னர் களமிறங்கிய ரிசப் பண்ட் மற்றும் 61 ரன்களை குவித்தார், பின்னர் களமிறங்கிய அபிஷேக் சர்மா விஜய் ஷங்கருடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பௌண்டரியை விளாசி அசத்தினார். பின்னர் டிம் சௌதி வீசிய பந்துகளில் 2 சிக்ஸர்களையும் தெறிக்கவிட்டார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை குவித்தது .

sharma3

இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அபிஷேக் சர்மா தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தினார். 19 பந்துகளில் 46 ரன்களை குவித்து 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடித்துள்ளார் . இதன் மூலம் ஐ.பி.எல் தொடர்களிலேயே தனது முதல் போட்டியில் அதிக ரன்களை குவித்த முதல் u19 வீரர் என்ற பெருமையை பெற்றார் அபிஷேக் சர்மா.

Advertisement