- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது போட்டியில் சதம் அடித்திருந்தாலும் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் அபிஷேக் சர்மா – என்ன காரணம்?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் தற்போதைக்கு இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜூலை 10-ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து துவக்க வீரரான அபிஷேக் சர்மா வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணிக்காக இந்த தொடரில் அறிமுகமான அவர் முதல் போட்டியில் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் மூன்றாவது போட்டியில் அவர் கிட்டத்தட்ட வெளியேற இருப்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த தொடரின் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதன் காரணமாக இந்த ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத ஜெய்ஸ்வால் தற்போது மூன்றாவது போட்டிக்கு முன்னதாக ஜிம்பாப்வே சென்றடைந்துள்ளதால் நிச்சயம் நாளை அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 1971 விதிமுறை தெரியாமல் தேசியக் கொடியை அவமானப் படுத்திய ரோஹித் சர்மா? அறிவுறுத்தம் ரசிகர்கள்

ஒருபுறம் சுப்மன் கில் கேப்டனாக இருப்பதால் அவரை துவக்க வீரருக்கான இடத்திலிருந்து நீக்க முடியாது. எனவே அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு ஜெய்ஸ்வால் அந்த இடத்தில் விளையாட இருப்பதாக தெரிகிறது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் அது அபிஷேக் ஷர்மாவுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -