ஆஸ்திரேலிய டி20 தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா

Abhishek and Tilak
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அடுத்து அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். டி20 போட்டிகளின் சாம்பியனான இந்திய அணியும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரில் மோத இருப்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா நிகழ்த்த இருக்கும் சாதனை :

இந்நிலையில் இந்த டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இந்த தொடரின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு முக்கிய சாதனை மைல் கல்லை எட்ட காத்திருக்கின்றனர். அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அவர்கள் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் இளம்வீரர் அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் சராசரியுடனும் இரண்டு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 849 ரன்கள் குவித்துள்ளார்.

கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 314 ரன்களை குவித்திருந்த அவர் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் மேலும் அவர் 151 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்வார்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான திலக் வர்மா இதுவரை 32 போட்டியில் விளையாடி 962 ரன்களை குவித்திருக்கும் வேளையில் மேலும் 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரும் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்வார்.

இதையும் படிங்க : ரோஹித் கோலியை இப்படி போட்டு அழுத்தாதீங்க.. அவங்கள கொண்டாட வேண்டிய நேரம் இது – ஏ.பி.டி கருத்து

டி20 போட்டிகளை பொருத்தவரை மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் 50+ ரன்கள் சராசரியுடனும், 150 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் அவரே இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement